ஸ்போர்ட்ஸ் கார்னர்: செயின்ட் பீட்ஸ் பள்ளி அணி கால்பந்தில் 'சாம்பியன்'
ஸ்போர்ட்ஸ் கார்னர்: செயின்ட் பீட்ஸ் பள்ளி அணி கால்பந்தில் 'சாம்பியன்'
ADDED : ஜூலை 04, 2026 02:09 AM
ஐந்து பேர் மட்டுமே விளையாடும் கால்பந்து போட்டியில், யு - 14 பிரிவில் சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் வானகரம் எஸ்.வி., பள்ளியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது.
அதேபோல், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான இறுதி போட்டியில், எழும்பூர் டான்போஸ்கோ பள்ளி அணி, பலம் வாய்ந்த செயின்ட் பீட்ஸ் அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சென்னை சாக்கர் ஸ்கூல் அகடாமி சார்பில், தி.நகர் பசும்பொன் அரங்கில் பல பிரிவுகளில் போட்டி நடந்து வருகிறது.
புதுார் அரசு பள்ளி அணி கிரிக்கெட்டில் அபார வெற்றி
எம் .சி.சி., பள்ளி சார்பில், எம்.ஆர்.எப்., கோப்பைக்கான டி - 20 கிரிக்கெட் தொடர், சேத்துப்பட்டில் உள்ள பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
நேற்று நடந்த 'நாக் அவுட்' ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த புதுார் அரசு பள்ளி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் குவித்தது. இதில் அப்துல் மாலிக், வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவரது இன்னிங்ஸில் 12 பவுண்டரிகள், ஆறு சிக்சர்கள் அடங்கும்.
அடுத்து இறங்கிய எம்.சி.சி., அணி, 18.1 ஓவர்களில் 82 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
