UPDATED : ஜூலை 05, 2026 05:58 PM
ADDED : ஜூலை 05, 2026 05:51 PM
சென்னை: கிரசன்ட் பல்கலையில் நடந்த மாநில செஸ் போட்டியில், 400 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
பி.எஸ்., அப்துர் ரகுமான் கிரசன்ட் பல்கலை சார்பில், மாநில அளவில் மூன்றாவது செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, வண்டலுாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில், எட்டு, 10, 13 மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்குமான பிரிவுகளில், தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
'சுவிஸ்' அடிப்படையில், 'பிடே' விதிப்படி நடந்த இப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
போட்டியை, கிரசன்ட் புதுமை மற்றும் தொழில் முனைவோர் மையத்தின் தலைமை செயல் அதிகாரி பர்வேஸ் ஆலம், டாப்பர்ஸ் கன்சல்டன்சி நிறுவனர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அனைத்து பிரிவிலும், முதல் 25 இடங்களை பிடித்த இருபாலருக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
