/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில வாலிபால், கபடி பள்ளிகளுக்கு அழைப்பு
/
மாநில வாலிபால், கபடி பள்ளிகளுக்கு அழைப்பு
ADDED : டிச 07, 2025 05:20 AM
சென்னை: மாநில அளவிலான வாலிபால் மற்றும் கபடி போட்டியில் பங்கேற்க, பள்ளி அணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலை சார்பில், பள்ளி அளவிலான 'வேந்தர் ஏ.எஸ்.கணேசன் கோப்பை' விளையாட்டு போட்டிகள், வரும் ஜனவரி 6 மற்றும் 7ம் தேதிகளில் நடக்க உள்ளன.
இதில், இருபாலருக்குமான வாலிபால் மற்றும் கபடி போட்டிகள் நடக்கின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி அணிகள் பங்கேற்கலாம்.
லீக் மற்றும் சூப்பர் லீக் சுற்றுகளாக போட்டிகள் நடக்கின்றன.
வெற்றி பெறும் அணிகளுக்கு, ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளன. போட்டியில் பங்கேற்க கட்டணம் கிடையாது.
பங்கேற்க விரும்பும் அணிகள், 72000 60626 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம் என, பல்கலையின் விளையாட்டுத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

