/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு புகுந்து கொள்ளை முயற்சி கூலிப்படையை ஏவிய வக்கீல்
/
வீடு புகுந்து கொள்ளை முயற்சி கூலிப்படையை ஏவிய வக்கீல்
வீடு புகுந்து கொள்ளை முயற்சி கூலிப்படையை ஏவிய வக்கீல்
வீடு புகுந்து கொள்ளை முயற்சி கூலிப்படையை ஏவிய வக்கீல்
ADDED : மார் 20, 2024 12:21 AM
அடையாறு, அடையாறு, காமராஜர் அவென்யூ 2வது தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 80; ஓய்வு பெற்றவங்கி ஊழியர். தனியாக வசிக்கிறார். கடந்த 6ம் தேதி, அவரது வீட்டுக்குள் புகுந்த நான்கு பேர், அவரின் வாயைப் பொத்தி பொருட்களை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
புகாரின்படி விசாரித்த அடையாறு போலீசார், 10ம் தேதி, 16 வயது சிறுவனை கைது செய்தனர். இந்நிலையில், நேற்று அடையாறைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரீத்தா, 50, மாதவரத்தைச் சேர்ந்த முருகன், 37, பிரகாஷ், 35, ஆகியோரை கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியான சிறுவனின் சித்தப்பாவை, போலீசார் தேடுகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த பிரீத்தா, 2019ல் ஒரு கொலை வழக்கில் சிக்கியதால், வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டது. ரவிச்சந்திரனுக்கு யாரும் இல்லாததால், அவரது சொத்தை அபகரிக்க பிரீத்தா முயற்சித்துள்ளார்.
இதற்காக, அவரது சொத்து ஆவணங்கள், நகை, பணத்தை கொள்ளையடிக்க கூலிப்படையை அனுப்பியுள்ளார். சம்பவம் நடந்த அன்று அக்கம் பக்கத்தினர் பார்த்து தடுத்ததால், நான்கு பேரும் தப்பிச் சென்றனர். இதனால் சொத்து ஆவணங்கள், நகை, பணம் தப்பியது. சிறுவனின் சித்தப்பாவை ஒரு நாளில் பிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

