/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீணாகிய மேம்பால சுவர் பூங்கா பயன்படுத்த முடியாதபடி அழிப்பு
/
வீணாகிய மேம்பால சுவர் பூங்கா பயன்படுத்த முடியாதபடி அழிப்பு
வீணாகிய மேம்பால சுவர் பூங்கா பயன்படுத்த முடியாதபடி அழிப்பு
வீணாகிய மேம்பால சுவர் பூங்கா பயன்படுத்த முடியாதபடி அழிப்பு
ADDED : டிச 09, 2025 06:27 AM

அமைந்தகரை: அண்ணா நகர் மண்டலம், திருங்கலம் மற்றும் அண்ணா வளைவு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைத் துறையின் மேம்பாலத் துாண்களில், அழகுக்காக சுவர் பூங்கா அமைக்கப்பட்டது.
இந்த பூங்காவில் பராமரிப்பு இல்லாததால், செடிகள் இன்றியும், அவற்றை தாங்கும் பிளாஸ்டிக் தொட்டிகள் உடைந்தும் காணப்படுகின்றன. துாண்கள் இடையே வைத்த செயற்கை நீரூற்றும் இயங்காமல் உள்ளன.
மோசமான பராமரிப்பு காரணமாக மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்பட்டு வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மேம்பாலங்களில், பல லட்சம் ரூபாய செலவில் அமைத்த சுவர் பூங்காக்ககள், தற்போது, இருந்த இடமே தெரியாத அளவில் மாயமாகியுள்ளன.
அண்ணா நகரில் தற்போது, மீண்டும் பயன்படுத்த முடியாத வகையில், துாண்களில் இருந்த, செடி தொட்டிகளை உடைத்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
திருமங்கலத்தில் மெட்ரோ பணிகளை காரணம் காட்டி, பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை; இதனால், மக்களின் வரிப்பணம் தான், செடியுடன் சேர்ந்து காய்ந்து போனது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

