/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாலுகா அலுவலகத்தில் குடிநீரின்றி அவதி
/
தாலுகா அலுவலகத்தில் குடிநீரின்றி அவதி
ADDED : மார் 15, 2024 12:36 AM
பூந்தமல்லி பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தாததால், மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
பூந்தமல்லி தாலுகா அலுவலகத்திற்கு தினமும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டா, பட்டா பெயர் மாற்றம், பட்டா உட்பிரிவு, ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு விண்ணப்பிக்கவும், விசாரணைக்காகவும், சான்றிதழ்கள் பெறவும் வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் குடிப்பதற்கு, இரண்டு இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இவை இரண்டும், பல மாதங்களாக பராமரிப்பின்றி, செயல்படாமல் உள்ளன.
இதனால், தாலுகா அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லாமல், பொதுமக்கள் தவிக்கின்றனர். கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், தாலுகா அலுவலகத்தில் குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

