/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட்டில் ரூ.30 கோடி கஞ்சா பறிமுதல் கடத்தலில் ஈடுபட்ட இரு பெண்கள் சிக்கினர் ரூ.30 கோடி உயர் ரக கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல் கடத்தலில் ஈடுபட்ட இரு பெண்கள் சிக்கினர்

ADDED : நவ 14, 2025 03:19 AM
சென்னை. நவ. 14-: தாய்லாந்தில் இருந்து மலேஷியா வழியாக விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த 30 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த பெண்கள் இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தாய்லாந்து மற்றும் மலேஷியா நாடுகளில் இருந்து போதை பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக, சென்னை விமான நிலைய 'ஏர் இன்டலிஜன்ட்' பிரிவு அதிகாரிகளுக்கு, நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், செ ன்னையில் தரையிறங்கும் விமானங்களை கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு 11:05 மணிக்கு, மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த விமானம் தரையிறங்கியது. அதில் வந்த சென்னை, இ.சி.ஆர்., பகுதியைச் சேர்ந்த இரு பெண் பயணியரின் உடைமைகள், வழக்கத்திற்கு மாறாக இருந்தன.
அவற்றை சோதனை செய்தபோது, பாக்கெட்களில் அடைக்கப்பட்டிருந்த ஹைட்ரோபோனிக் வகை உயர்ரக கஞ்சா 30 கிலோ இருந்தது. அதன் சர்வதேச சந்தை மதிப்பு 30 கோடி ரூபாய்.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இரண்டு பெண்களையும் விசாரித்தனர். அதில், போதை பொருள் வினியோகம் செய்யும் சிண்டிகேட் உதவியுடன், இவற்றை கடத்தி வந்தது தெரிந்தது.
சுங்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடத்தலில் ஈடுபட்ட இரு பெண்களும், வெவ்வேறு நபர்களின் உதவியுடன் ஒன்றாக சுற்றுலா செல்வது போல முதலில் தாய்லாந்து சென்றுள்ளனர். அங்கு, ஒருவரிடம் கஞ்சாவை வாங்கியுள்ளனர்.
அங்கிருந்து நேரடியாக சென்னைக்கு வந்தால், உடனடியாக சிக்கிவிடுவோம் என, பயந்து மலேஷியா சென்றனர். அங்கிருந்து சென்னைக்கு வந்தனர். கஞ்சாவை பத்திரமாக சென்னையில் ஒப்படைக்க, முன்கூட்டியே கமிஷன் வாங்கியது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.