/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்லாங்குழி சாலைக்கு விடிவு கிடைக்குமா?
/
பல்லாங்குழி சாலைக்கு விடிவு கிடைக்குமா?
ADDED : டிச 09, 2025 06:25 AM

மோரை: மோசமான பல்லாங்குழி சாலைகளால் மோரை ஊராட்சி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் ஒன்றியம், மோரை ஊராட்சியில் உள்ள புதிய கன்னியம்மன் நகரில் உள்ள சாலைகளில், 'தார்' மற்றும் சிமென்ட் சாலை பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டது. நகரை உருவாக்கியது முதல் தற்போது வரை குடியிருப்பாளர்களிடம் பல்வேறு வரி வசூலிக்கும் அரசு நிர்வாகம், தரமான சாலைகளை அமைக்காதது, பகுதி மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. நகரில் உள்ள அனைத்து சாலைகளும் செம்மண் சாலைகளாகவே உள்ளன.
பேருந்து போக்குவரத்து கொண்ட வீராபுரம் கேம்ப் சாலையும் மரண பள்ளங்களோடு காட்சியளிக்கின்றன.
இது குறித்து பகுதி மக்கள் கூறுகையில், '15 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து, தற்போது தான் காரிய மேடை அமைத்து தந்துள்ளனர். அதேபோல், சாலைகளையும் மேம்படுத்தி தர வேண்டும். மோசமான நிலையில் சாலைகள் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது' என்றனர்.

