/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தோழியிடம் பேசியதால் வாலிபர் மீது தாக்குதல்
/
தோழியிடம் பேசியதால் வாலிபர் மீது தாக்குதல்
ADDED : டிச 08, 2025 05:28 AM
அமைந்தகரை: அருப்பாக்கம், என்.எஸ்.கே., நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாய்நாதன், 18. இவர், தன் நண்பருடன் இருசக்கர வாகனத்தில், அண்ணாநகர் வளைவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த தீனா என்பவர், தன் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து, சாய்நாதனின் இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளினர். பின், தகாத வார்த்தைகளால் பேசி, கையால் தாக்கி, கத்தியால் வெட்ட முயன்றனர். சாய்நாத் அங்கிருந்து நண்பருடன் தப்பினார்.
அமைந்தகரை போலீசார் வழக்கு பதிந்து, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 24, சின்னையா, 24, ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், தீனா என்பவரின் தோழியிடம், சாய்நாத் அடிக்கடி பேசியதாகவும், இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்யும் முயற்சியில் தீனா ஈடுபட்டதும் தெரியவந்தது. தீனாவை, போலீசார் தேடி வருகின்றனர்.

