ADDED : ஜூலை 09, 2026 12:52 AM

அ நிறம் | அளவு
வியாசர்பாடி: வியாசர்பாடி, சாமி யார் மடம் ஒன்றாவது தெருவில், முகம் சிதைக்கப்பட்ட நிலையில், 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார்.
வியாசர்பாடி போலீசாருக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில், வியாசர்பாடி, உதயசூரியன் நகரைச் சேர்ந்த நரேஷ்குமார், 25, என்ற வாலிபர்தான், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டது என்பது தெரியவந்தது.
கொலைக்கான காரணம், கொலை செய்தவர்கள் குறித்து, வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
