/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச தரத்தில் அத்வைத் அகாடமி
/
சர்வதேச தரத்தில் அத்வைத் அகாடமி
ADDED : பிப் 27, 2025 09:19 PM
மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய முழுமையான கல்வியை வழங்குவதில் அத்வைத் அகாடமி பள்ளி சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
1984ம் ஆண்டு ஜி.என்., சாம் அறக்கட்டளையால், நிர்வாகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளின் நலன் கருதி தொடங்கப்பட்டது. தற்போது, அதிநவீன கட்டமைப்புடன் கூடிய சி.பி.எஸ்.இ., பள்ளியாக உயர்ந்துள்ளது.
பசுமையான சூழலில், தொழில்நுட்பத்துடன் கூடிய வகுப்பறைகள், அனுபவம் மற்றும் திறன் வாய்ந்த ஆசிரியர்கள், நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள் உள்ளது. இங்கு மாணவர்களை சர்வதேச அளவில் தயார்ப்படுத்த ரோபோடிக்ஸ் கல்வியும் கற்றுத் தரப்படுகிறது.
மாணவர்களுக்கு பல்வேறு விதமான கருத்தரங்குகள், பயிலரங்குகள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. மாதந்தோறும் இரு சனிக்கிழமைகளில் புத்தகம் இல்லா நாளாகவும் , மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பல்வேறு செயலாக்கங்களும் மேற்கொள்ளப்பட்டு, கற்றலுடன், மாணவர்களின் அறிவாற்றலும் மேம்படுத்தப்படுகிறது.
பள்ளியின் தாளாளரும், முன்னணி தொழில் அதிபருமான ரவிசாம்வின் சமூக சிந்தனையுடன் கூடிய தொலைநோக்குப் பார்வையுடன் பள்ளி செயல்படுகிறது. தனித்துவமான அணுகுமுறையால் மாணவர்கள் எதிர்காலத்தில் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து சாதனைகள் புரிய ஊக்குவிக்கப்படுகின்றன.

