தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொடிசியாவில் ‘அக்ரி இன்டெக்ஸ்’ கண்காட்சி வரும் 9ம் தேதி துவக்கம்

கொடிசியாவில் ‘அக்ரி இன்டெக்ஸ்’ கண்காட்சி வரும் 9ம் தேதி துவக்கம்

கொடிசியாவில் ‘அக்ரி இன்டெக்ஸ்’ கண்காட்சி வரும் 9ம் தேதி துவக்கம்


ADDED : ஜூலை 03, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கொடிசியாவில் அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சி, வரும் 9ம் தேதி துவங்குகிறது.

கொடிசியா தலைவர் ரங்கசாமி, அக்ரி இன்டெக்ஸ் தலைவர் ஸ்ரீஹரி ஆகியோர் அளித்த பேட்டி:

9ம் தேதி நடக்கும் கண்காட்சி துவக்க விழாவில் சக்தி சுகர்ஸ் தலைவர் மாணிக்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (பொ) துணைவேந்தர் சுப்ரமணியன், தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் துணை வேந்தர் பெலிக்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

தமிழகம் மட்டுமல்லாமல் டில்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளம், மகாராஷ்டிரா உள்பட 16 மாநிலங்களை சேர்ந்த 460க்கும் மேற்பட்ட நிறுவனத்தினர் பங்கேற்கவுள்ளனர்.

660 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இருந்து ஒரு லட்சத்து 50,000 விவசாயிகள் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம்.

இத்தாலி, மலேசியா, ஜப்பான், அமெரிக்க நிறுவனங்கள் பங்கேற்கின்றன். தினசரி காலை 9 முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி நடைபெறும். அடையாள சான்றுள்ள விவசாயிகளுக்கு நுழைவு கட்டணம் இல்லை. பொது பார்வையாளர்களுக்கு ரூ.50 கட்டணம். visitor.coddisia.com என்கிற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us