ADDED : ஜூலை 08, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
செட்டிபாளையம்: செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்குவாரிகள் அதிகம் உள்ளன.
இங்கு லோடு ஏற்ற வரும் லாரிகளில் ஏர் ஹாரன் பயன்படுத்தப்படுகிறது. இரவில் ஏர்ஹாரன் ஒலிக்க விட்டபடி வேகமாக செல்லும் இந்த லாரிகள் குறித்து, பொதுமக்கள் போலீசில் புகார் செய்தனர். நேற்று இன்ஸ்பெக்டர் செல்வராகவன், போலீசாருடன் செட்டிபாளையம் ரவுண்டானா பகுதியில் டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தார். இதில் 10 ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, லாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
