/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவானி ஆறு வற்றியது; போர்வெல் தண்ணீர் வழங்க கோரிக்கை
/
பவானி ஆறு வற்றியது; போர்வெல் தண்ணீர் வழங்க கோரிக்கை
பவானி ஆறு வற்றியது; போர்வெல் தண்ணீர் வழங்க கோரிக்கை
பவானி ஆறு வற்றியது; போர்வெல் தண்ணீர் வழங்க கோரிக்கை
ADDED : மார் 22, 2024 01:00 AM

மேட்டுப்பாளையம்;பவானி ஆற்றில் தண்ணீர் வற்றியதால், போர்வெல்லில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுமுகை அருகே மூளையூரில், பவானி ஆற்றில் இருந்து,6 ஊராட்சிகளுக்கு, கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, தண்ணீர் எடுக்கப்படுகிறது.தற்போது பவானி ஆற்றில், நீர்வரத்து முற்றிலும் குறைந்ததால், தண்ணீர் எடுக்கும் மூளையூரில் அமைத்துள்ள, கிணற்றுக்கு தண்ணீர் வரவில்லை. அதனால் மூன்று நாட்களாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், பொக்லைன் வாயிலாக, ஆற்றில் உள்ள சேற்றை அகற்றி, கிணற்றுக்கு தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஆற்றில் தண்ணீர் வற்றியதால், மின்மோட்டார் உறிஞ்சி எடுக்கும் அளவுக்கு தண்ணீர் தேக்கம் இல்லை. தண்ணீர் இல்லாமல் மோட்டார் ஓடியதால் பழுதடைந்தது. அதை சரி செய்த பின், தண்ணீர் எடுக்கும் இடத்தில் உள்ள சேறு அகற்றப்பட்டது. தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில் கரை அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: அந்தந்த ஊராட்சிகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள, போர்வெல்லை சுத்தம் செய்து, மின்மோட்டார் வாயிலாக, தண்ணீரை மேல்நிலைத் தொட்டிகளுக்கு ஏற்றி, சீரான குடிநீர் வழங்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளையும், நடவடிக்கையும், மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

