/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் 'குடி'மகன்கள் 'அட்ராசிட்டி'
/
ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் 'குடி'மகன்கள் 'அட்ராசிட்டி'
ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் 'குடி'மகன்கள் 'அட்ராசிட்டி'
ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் 'குடி'மகன்கள் 'அட்ராசிட்டி'
ADDED : ஜூலை 25, 2024 10:26 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் பின்பகுதியில் சமூக விரோதிகள் மது அருந்துவதால் பயணியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் வழியாக நாள்தோறும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர்.
இரவு நேர ரயில்கள் மற்றும் வாராந்திர சிறப்பு ரயில்கள் வருவதால் ஏராளமானோர் ரயில்வே ஸ்டேஷன் வந்து செல்கின்றனர். குறிப்பாக, பெண்கள் இரவு நேர ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர்.
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், இரண்டு வழித்தடங்கள் உள்ளன. ஒரு வழித்தடம் தார் ரோடாகவும், மற்றொறு பாதை மண் ரோடாகவும் உள்ளது. இதில், தார் ரோடு வழியாக பெருமளவு பயணியர் சென்று வருகின்றனர். மண் ரோட்டை குறைந்த அளவு பயணியரே பயன்படுத்துகின்றனர்.
இதில், இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர், மண் ரோடு அருகே உள்ள ரயில்வே ரேம்ப்பில் அமர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும், காலி மதுபாட்டில்களை ரோட்டில் வீசி செல்வதால் நடந்து வரும் பயணியர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
'குடி'மகன்களின் அத்துமீறலை தடுக்க, ரயில்வே ஸ்டேஷன் ரேம்ப் அருகில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்.
இங்கு அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

