/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆன்லைன் டாஸ்க்' பணம் தருவதாக பெண்ணிடம் ரூ.5.74 லட்சம் மோசடி
/
'ஆன்லைன் டாஸ்க்' பணம் தருவதாக பெண்ணிடம் ரூ.5.74 லட்சம் மோசடி
'ஆன்லைன் டாஸ்க்' பணம் தருவதாக பெண்ணிடம் ரூ.5.74 லட்சம் மோசடி
'ஆன்லைன் டாஸ்க்' பணம் தருவதாக பெண்ணிடம் ரூ.5.74 லட்சம் மோசடி
ADDED : ஏப் 27, 2024 02:33 AM
கோவை:கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஜெகதீசன் மனைவி பூர்ணிமா, 39. இவர் கடந்த மாதம் பகுதி நேர வேலை வாய்ப்பு குறித்த விபரங்களை, ஆன்லைனில் தேடி கொண்டிருந்தார்.
அப்போது அவரது 'வாட்ஸாப்' எண்ணுக்கு, பகுதி நேர வேலை வாய்ப்பு குறித்த மெசேஜ் வந்தது. பூர்ணிமா அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
அதில் பேசிய நபர், சிறிய அளவில் முதலீடு செய்து ஆன்லைன் டாஸ்க் செய்யும் போது, அதிக லாபம் பெறலாம் என கூறியுள்ளார்.
பூர்ணிமா முதலில் சிறிய அளவில் பணம் முதலீடு செய்தார். உடனே கூடுதல் லாபம் கிடைத்தது. நம்பிய அவர், பல்வேறு தவணைகளாக 5.74 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். அதன் பின் எந்த லாபமும் கிடைக்கவில்லை.
அவர்களை தொடர்பு கொண்ட போது, கூடுதல் பணம் செலுத்தினால் தான் பணம் திருப்பி அனுப்பப்படும் என தெரிவித்துள்ளனர். பூர்ணிமா கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.