/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலவச பயிற்சி கனரக வாகன ஓட்டுனருக்கு இலவச பயிற்சி
/
இலவச பயிற்சி கனரக வாகன ஓட்டுனருக்கு இலவச பயிற்சி
UPDATED : மார் 22, 2024 12:47 PM
ADDED : மார் 22, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்;மத்திய அரசின், தேசிய திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் பல்வேறு தொழில் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இக்கழகம் அன்னுார் ஐ.டி.ஐ.,யுடன் இணைந்து, கனரக (ஜே.சி.பி.,) வாகனம் ஓட்டுவதற்கான சான்றிதழ் பயிற்சி வகுப்பு நடத்துகிறது.
பயிற்சி இலவசம். பயிற்சி பெறுவோருக்கு அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெறவும் பெரு நிறுவனங்களில் வேலை பெறவும் தகுதியானது. பயிற்சியில் சேர 99941 44846 என்னும் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஐ.டி.ஐ., நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

