ADDED : ஜூலை 05, 2026 06:21 PM
வால்பாறை: வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் படிக்கும் மாணவியருக்கு, சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார், பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கல்லுாரி முதல்வர் கோபி தலைமையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சிங்கப்பெண் போலீசார் பேசியதாவது:
கல்லுாரியில் படிக்கும் மாணவியர், பொது இடங்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பாலியல் ரீதியாக யாரேனும் துன்புறுத்தினால், அவர்களிடம் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலை தெரிந்து கொள்வது மிக அவசியம்.
மொபைல் போனில் தேவையில்லாத அழைப்புக்களை தவிர்க்க வேண்டும். படிக்கும் வயதில் மனதை ஒரு நிலைப்படுத்தி, தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் தரக்கூடாது. எந்த பிரச்னையானாலும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க தயக்கம் காட்டக்கூடாது.
இவ்வாறு, தெரிவித்தனர்.
