/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு விடுதியில் தங்க அனுமதி வேண்டும்
/
அரசு விடுதியில் தங்க அனுமதி வேண்டும்
ADDED : ஆக 25, 2024 10:45 PM
கோவை:சென்னையில் உள்ள தொழிலாளர் அரசு தங்கும் விடுதியில், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்க அனுமதி வழங்க வேண்டும் என, சாதி மதம் சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி, தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியுள்ளதாவது:
தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை சார்பாக, சென்னையில் 'ஜீவா இல்லம்' என்ற பெயரில் ஒரு தங்கும் விடுதி நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், அதிகாரிகளை சந்திக்க சென்னை வரும்போது குறைந்த கட்டணத்தில் இந்த விடுதியில் தங்கி வருகின்றனர். இந்த விடுதியில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், தங்குவதற்கு அனுமதி அளித்து, ஆணை வெளியிட வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

