ADDED : ஜூலை 03, 2026 04:01 PM
பொள்ளாச்சி: அஞ்சலக ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும், 10ம் தேதி காலை, 11:00 மணிக்கு பொள்ளாச்சி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
வரும், 8ம் தேதி வரை அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் பெறப்பட்ட மனுக்கள் பரீசிலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மனுக்களை அஞ்சலக ஓய்வூதியர்கள், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், பொள்ளாச்சி அஞ்சல் கோட்டம், பொள்ளாச்சி, 642001 என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது, dopollachi.tn@indiapost.gov.in என்ற முகவரிக்கு மின்னசலிலோ அனுப்பலாம்.
தபாலில் அனுப்பும் போது, உறையின் மேல், ‘பென்ஷன் அதாலத்’ என்றும், மின்னஞ்சலில் அனுப்பும் போது, பொருளில், ‘பென்ஷன் அதலாத்’ என குறிப்பிட வேண்டும்.
வாரிசுதாரர் போன்ற சட்ட ரீதியான குறைகள், கொள்கை சம்பநத்தப்பட்ட குறைகளை அதாலத்தில் எடுத்துக்கொள்ள முடியாது என, அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினி பேகம் தெரிவித்தார்.
