/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடுகள் சீரமைப்பு பணி; பயனாளர்களுக்கு உத்தரவு
/
வீடுகள் சீரமைப்பு பணி; பயனாளர்களுக்கு உத்தரவு
ADDED : ஜூலை 25, 2024 10:34 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு ஒன்றியத்தில், வீடுகள் சீரமைப்பு பணி மேற்கொள்ள பயனாளிகளுக்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் அரசு வீடுகள் சீரமைப்பு பணி மேற்கொள்ள பயனாளர்கள் தேர்வு செய்ய, கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமானோர் விண்ணப்பம் அளித்தனர். இதில், வீடுகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள, 92 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து, நேற்று கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் தலைமையில், 92 பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் உள்ள, 104 பயனாளர்கள் பணியை துவங்கி உள்ளார்களா என, ஊராட்சி செயலர்கள் மற்றும் மக்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், பணிகள் துவங்காத பயனாளர்களிடம், விரைவாக பணிகள் துவங்க வேண்டும் எனவும், சீரமைப்பு பணிகள் செய்யும் செலவின தொகை குறித்தும் விளக்கம் அளித்தார்.

