/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீகுமரன் தங்க மாளிகை புதுப்பித்த தளம் திறப்பு விழா
/
ஸ்ரீகுமரன் தங்க மாளிகை புதுப்பித்த தளம் திறப்பு விழா
ஸ்ரீகுமரன் தங்க மாளிகை புதுப்பித்த தளம் திறப்பு விழா
ஸ்ரீகுமரன் தங்க மாளிகை புதுப்பித்த தளம் திறப்பு விழா
ADDED : ஏப் 22, 2024 01:54 AM

திருப்பூர்;திருப்பூர், புது மார்க்கெட் வீதியில் உள்ள, ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் புதுப்பிக்கப்பட்ட தளங்களின் திறப்பு விழா நடந்தது. நிர்வாக இயக்குனர் சிவலிங்கம் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இயக்குனர் பத்மா சிவலிங்கம் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
நிர்வாகத்தினர் கூறுகையில், ''தொடர்ந்து 31 ஆண்டாக பேராதரவு அளித்து வந்த வாடிக்கையாளர்களுக்கு திறப்பு விழா சலுகையாக வரும் 23ம் தேதி(நாளை) வரை தங்க நகைகளுக்கு ஒரு பவுனுக்கு 1500 ரூபாய்- வரையும்; டைமண்ட் நகைகளுக்கு கற்களின் மதிப்பில் பிளாட் 10 சதவீதமும்; பெரும்பான்மையான வெள்ளி பொருட்களுக்கு செய்கூலி, சேதாரத்தில் 100 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. குறைந்த சேதாரத்தில் உயர் தர தங்கம், வெள்ளி, வைர நகைகள் விற்கப்படுவதால், வாடிக்கையாளர் பலர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர். சேவையைத் தொடர்வதில் மகிழ்கிறோம்'' என்றனர்.

