தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேலை வழங்க வலியுறுத்தி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

வேலை வழங்க வலியுறுத்தி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

வேலை வழங்க வலியுறுத்தி ஒன்றிய அலுவலகம் முற்றுகை


ADDED : ஜூலை 06, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 05:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, ஆண்டிபாளையம் ஊராட்சி மக்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிணத்துக்கடவு, ஆண்டிபாளையம் ஊராட்சி, வஞ்சிபாளையம் கிராமத்தில், வி.பி.கிராம்ஜி திட்டத்தின் கீழ், பணிகள் வழங்கப்படாததால், மக்கள் வேலை கேட்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இது குறித்து, மக்கள் கூறியதாவது:

கிராமத்தில் குடிமராமரத்து பணிகள் செய்ய, இத்திட்டதில் வேலை கிடைத்தது. இதனால், 100க்கும் அதிகமான பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். ஆனால், 2 ஆண்டுகளாக எந்த வேலையும் வழங்குவதில்லை. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சிலர் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் வேலை வேண்டி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்துள்ளோம்.

இவ்வாறு, கூறினர்.

ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், 100 நாட்களாக இருந்தது. தற்போது பெயர் மாற்றம் செய்து, 125 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. இதில், மரம் நடவுக்கு மட்டும் வேலை வழங்கப்படுகிறது.

மேலும், ஆண்டிபாளையம் ஊராட்சியில் இத்திட்டங்களில் வரும் பெரும்பாலான வேலைகள் முடிக்கப்பட்டதால், மக்களுக்கு பணிகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்தத் திட்டத்தின் வாயிலாக பணிகள் ஒதுக்கீடு செய்த பின், அப்பகுதியினருக்கு நிச்சயம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us