/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பு மருத்துவ முகாமில் 1,641 பேருக்கு பரிசோதனை
/
சிறப்பு மருத்துவ முகாமில் 1,641 பேருக்கு பரிசோதனை
சிறப்பு மருத்துவ முகாமில் 1,641 பேருக்கு பரிசோதனை
சிறப்பு மருத்துவ முகாமில் 1,641 பேருக்கு பரிசோதனை
ADDED : டிச 09, 2025 05:24 AM
அன்னூர்: கணேசபுரத்தில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில், 1,641 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
பொது சுகாதாரத்துறை மற்றும் பொகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், கணேசபுரம், ஸ்ரீ பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.
மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி முன்னிலை வகித்து பேசுகையில், பொதுமக்கள், துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனைகள் செய்தும், மருத்துவ முகாமில் பங்கேற்றும் பயன்பெறலாம். மருத்துவ காப்பீடு அட்டை மூலம் செலவில்லாமல், அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம், என்றார்.
முகாமில் 1,317 பேருக்கு, லேப் பரிசோதனையும், 1,295 பேருக்கு இ.சி.ஜி.,106 பேருக்கு இருதய பரிசோதனை செய்யப்பட்டது. சித்த மருத்துவ பிரிவில் 141 பேர் பயன் பெற்றனர். தீவிர சிகிச்சை தேவைப்படுவோர், கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
மருந்துகள் வழங்கப்பட்டன. வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த்ராஜ், தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் தனபாலன், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

