/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமரின் ஊக்கத்தொகை பெற தனி அடையாள எண் அவசியம்
/
பிரதமரின் ஊக்கத்தொகை பெற தனி அடையாள எண் அவசியம்
ADDED : டிச 02, 2025 06:44 AM
மேட்டுப்பாளையம்: பிரதமரின் ஊக்கத்தொகை பெற விவசாயிகள், தனி அடையாள அட்டை பெற வேண்டும் என காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பிரதமரின் விவசாய கவுரவ ஊக்கத்தொகை பெறுவதற்கு விவசாயிகள் தனி அடையாள அட்டை எண் பெற வேண்டும். காரமடையில் சுமார் 1,170 விவசாயிகள், பிரதமரின் ஊக்கத்தொகை பெறுவதற்கு, தனி அடையாள அட்டை எண் பதிவு மேற்கொள்ளாமல் உள்ளதால், ஊக்கத்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் உடனடியாக அருகில் உள்ள இ-சேவை மையங்களில் முக்கிய ஆவணங்களான ஆதார் அட்டை, சிட்டா மற்றும் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் மற்றும் பிற ஆவணங்களை எடுத்துக் கொண்டு உடனே பதிவு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.-----------------

