/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணா பல்கலை தடகளப்போட்டி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த வீரர்கள்
/
அண்ணா பல்கலை தடகளப்போட்டி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த வீரர்கள்
அண்ணா பல்கலை தடகளப்போட்டி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த வீரர்கள்
அண்ணா பல்கலை தடகளப்போட்டி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த வீரர்கள்
ADDED : நவ 17, 2024 05:18 AM

கோவை: அண்ணா பல்கலை ஒன்பதாவது மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து கல்லுாரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டி, கோவை சி.ஐ.டி., கல்லுாரியில் நேற்று நடந்தது; 15 கல்லுாரிகளின், 350 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
போட்டி நடந்த சி.ஐ.டி., கல்லுாரி பகுதியில் நேற்று மழை பெய்தது. வீரர், வீராங்கனைகள் அதைப் பொருட்படுத்தாமல், இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தனர். போட்டிகளை சி.ஐ.டி., கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார்.
மாணவியர் வட்டு எறிதல் போட்டியில் சி.ஐ.டி., கல்லுாரி மாணவி சகாரிகா முதலிடம், ஸ்ரீ சக்தி இன்ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி (எஸ்.எஸ்.ஐ.இ.டி.,) மாணவி சவுமியாஸ்ரீ இரண்டாமிடம், கே.பி.ஆர்., கல்லுாரி மாணவி, ஸ்ருதி மூன்றாமிடம் பிடித்தனர்.
மாணவியர், 400 மீ., ஓட்டத்தில், சி.ஐ.டி., கல்லுாரி மாணவி ஷாலினி முதலிடம், கே.பி.ஆர்., கல்லுாரி மாணவி தர்ஷினி இரண்டாமிடம், எஸ்.எஸ்.ஐ.இ.டி., கல்லுாரி மாணவி ஐஸ்லின் பேபிஸ்டா மூன்றாமிடம் பிடித்தனர். மாணவியருக்கான மராத்தான் போட்டியில், எஸ்.எஸ்.ஐ.இ.டி., கல்லுாரி மாணவி தரணிபிரியா முதலிடம், சி.ஐ.டி., கல்லுாரி மாணவியர் வர்ஷா, பாரதி ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர்.
மாணவர்களுக்கான மராத்தான் போட்டியில், என்.ஜி.பி., கல்லுாரி மாணவர் பரணி முதலிடம், சி. ஐ.டி., கல்லுாரி மாணவர் சர்வேஸ்வரன் இரண்டாமிடம், கே.பி.ஆர்., கல்லுாரி மாணவர் நிதீஸ் மூன்றாமிடம் பிடித்தனர்.
மாணவர்களுக்கான 10 கி.மீ., நடைப்போட்டியில், சி.ஐ.டி., கல்லுாரி மாணவர் பாஸ்டின் பென்டிக்ட் முதலிடம், எஸ்.எஸ்.ஐ.இ.டி., கல்லுாரி மாணவர்கள் ரத்தின பிரகாஷ், சீனிவாசம்யா ஆகியோர் இரண்டு, மூன்றாம் இடத்தை பிடித்தனர். மாணவருக்கான, 400 மீ., ஓட்டத்தில், எஸ்.எஸ்.ஐ.இ.டி., கல்லுாரி மாணவர் விக்னேஷ் முதலிடம், கே.பி.ஆர்., கல்லுாரி மாணவர் கோகுல் இரண்டாமிடம், சி.ஐ.டி., கல்லுாரி மாணவர் மலரவன் மூன்றாமிடம் பிடித்தனர்.