/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திக்கடவு திட்ட குழாய் உடைப்பு : போலீஸ் பாதுகாப்போடு சீரமைப்பு
/
அத்திக்கடவு திட்ட குழாய் உடைப்பு : போலீஸ் பாதுகாப்போடு சீரமைப்பு
அத்திக்கடவு திட்ட குழாய் உடைப்பு : போலீஸ் பாதுகாப்போடு சீரமைப்பு
அத்திக்கடவு திட்ட குழாய் உடைப்பு : போலீஸ் பாதுகாப்போடு சீரமைப்பு
ADDED : நவ 14, 2025 10:12 PM

அன்னுார்: அத்திக்கடவு திட்ட பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு, ஒன்றரை மாதத்திற்கு பிறகு நேற்று சரி செய்யப்பட்டது.
அன்னுாரில் இருந்து நல்லிசெட்டிபாளையம் வழியாக, மேற்கு பகுதிக்கு செல்லும் அத்திக்கடவு திட்ட பிரதான குழாயில், ஒன்றரை மாதத்திற்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பால் நல்லிசெட்டிபாளையம் குளத்தில் நீர் சேர்ந்தது.
இந்த உடைப்பை அடைக்க, அதிகாரிகள் பல முறை முயற்சித்தனர். ஆனால் அப்பகுதி விவசாயிகள், 'எங்கள் குளத்திற்கு மிகச் சிறிய குழாய் பதிக்கப்பட்டுள்ளது. குழாயை பெரிது படுத்தும் வரை உடைப்பை அடைப்பதற்கு விடமாட்டோம்' என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அன்னுாருக்கு மேற்கே உள்ள 150 குளம், குட்டைகளுக்கு கடந்த ஒன்றரை மாதமாக அத்திக்கடவு நீர் செல்லவில்லை. நேற்று, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையில் போலீஸ் பாதுகாப்போடு, அத்திக்கடவு திட்ட உதவி பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள், அடைப்பை சரி செய்யும் பணியை காலையில் துவக்கி மாலையில் முடித்தனர்.
இதையடுத்து, மேற்குப் பகுதி ஊராட்சிகளுக்கு அத்திக்கடவு நீர் செல்லும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
நல்லிசெட்டிபாளையம் மக்கள் கூறுகையில், 'எங்கள் குளத்து குழாயை பெரிதுபடுத்தி தருகிறோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததால், உடைப்பை சரி செய்ய ஒத்துழைத்தோம்' என்றனர்.

