/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பராமரிப்பின்றி பரிதாபமாய் தடுப்பணைகள்: உப்பாறு ஓடையில் அவலம்
/
பராமரிப்பின்றி பரிதாபமாய் தடுப்பணைகள்: உப்பாறு ஓடையில் அவலம்
பராமரிப்பின்றி பரிதாபமாய் தடுப்பணைகள்: உப்பாறு ஓடையில் அவலம்
பராமரிப்பின்றி பரிதாபமாய் தடுப்பணைகள்: உப்பாறு ஓடையில் அவலம்
ADDED : மார் 15, 2024 12:26 AM

குடிமங்கலம்;உப்பாறு ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில், மழை நீரை தேக்கி வைக்கும் வகையில், பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளுக்கும், நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமாக, உப்பாறு ஓடை மட்டுமே உள்ளது.
பல்வேறு பகுதிகளில் உருவாகும் மழை நீர் ஓடைகள், உப்பாறு ஓடையாக மாறி, உப்பாறு அணையை நோக்கிச்செல்கிறது. குறைந்த மழை பெய்யும் இப்பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் ஆண்டுதோறும் சரிந்து வருகிறது.
இவ்வாறு, நிலத்தடி நீர்மட்டம் சரிவு என்ற நீண்ட கால பிரச்னைக்கு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலங்களில், உப்பாறு ஓடையில் செல்லும் தண்ணீரை தேக்கி வைக்க, பல்வேறு திட்டங்களின் கீழ் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
ஆனால், போதிய பராமரிப்பு இல்லாமல், தடுப்பணைகள் அனைத்தும் பரிதாப நிலையில் உள்ளன. நீர் தேங்கும் பகுதி மண்மேடாக காட்சியளிக்கிறது.
கரைகள் சரிந்தும், பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது. கிராமங்களில், 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் இதே நிலையில் உள்ளன.
மேலும், ஓடையில் கழிவுகள் கொட்டுவதும் அதிகரித்துள்ளது. உப்பாறுக்கு நீர் வரத்து அளிக்கும் சிறிய ஓடைகள் ஆக்கிரமிப்பால், சுருங்கி காணாமல் போய் வருகின்றன.
பெரும்பாலான ஓடைகளில், சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து, மழைக்காலத்திலும், தண்ணீர் வருவதில்லை. இத்தகைய மரங்களை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பருவமழை சீசன் துவங்கும் முன், தடுப்பணைகளை பராமரித்து, மழை நீரை தேக்கினால், நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
இது குறித்து, பொதுப்பணித்துறையினரும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் என, மக்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.

