/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனரா வங்கியின் பென்ஷனர் சங்க விழா
/
கனரா வங்கியின் பென்ஷனர் சங்க விழா
ADDED : பிப் 10, 2025 10:58 PM
கோவை; கனரா வங்கி ஓய்வு பெற்ற அதிகாரிகள் சங்கத்தின், 29வது ஆண்டு விழா, கோவையில் நடந்தது.
துணைப் பொது செயலாளர் துரைசாமி வரவேற்றார். கோவை பிராந்திய மேலாளர்கள் ரித்தீஷ் சந்திரஜா மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினர்.
அகில இந்திய பொதுச் செயலாளர் ஜகதீஷ் பேசுகையில், ''சுமார் 15 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட இந்த சங்கம், 29 வருடங்கள் கடந்து வெற்றிகரமாக பயணிக்கிறது. குறிப்பாக, இடைக்கால ஓய்வூதிய உயர்வு, மருத்துவப்படி, இறுதிச்சடங்கு தொகை, பாதுகாப்புப் பெட்டக வாடகை குறைப்பு, பல்வேறு வங்கித்துறை சேவைக்கட்டண சலுகை போன்றவற்றை பெற்றுள்ளோம். நம்முடைய ஒரே நிலுவையிலுள்ள கோரிக்கை, வங்கி அதிகாரிகள் ஓய்வூதியமும், பணியில் உள்ளவர்கள் சம்பள உயர்வு ஒப்பந்தம் போல பெறப்பட வேண்டும். வரும் ஆண்டில் எப்படியும் பெறப்படும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், 75 வயதை கடந்த 15 ஓய்வூதியர்கள் கவுரவிக்கப்பட்டனர். துணைத்தலைவர் சம்பத்குமார், விழா ஏற்பாடுகளை மேற்கொண்டார். பிராந்திய குழு உறுப்பினர் ஈஸ்வர மூர்த்தி, நன்றி கூறினார். 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

