sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குழந்தைகள் கடத்தல் சம்பவம் வதந்தி எஸ்.பி., பத்ரி நாராயணன் விளக்கம்

/

குழந்தைகள் கடத்தல் சம்பவம் வதந்தி எஸ்.பி., பத்ரி நாராயணன் விளக்கம்

குழந்தைகள் கடத்தல் சம்பவம் வதந்தி எஸ்.பி., பத்ரி நாராயணன் விளக்கம்

குழந்தைகள் கடத்தல் சம்பவம் வதந்தி எஸ்.பி., பத்ரி நாராயணன் விளக்கம்


ADDED : மார் 15, 2024 02:13 AM

Google News

ADDED : மார் 15, 2024 02:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவையில் எஸ்.பி., பத்ரி நாராயணன் கூறியதாவது:

வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளை கடத்துவதற்காக நுழைந்துள்ளதாக வாட்ஸாப் வாயிலாக குரல் பதிவு பரவி வருகிறது.

இது, 100 சதவீதம் வதந்தி. பொதுமக்கள் இதை நம்ப வேண்டாம். வடமாநிலத்தில் இருந்து கோவைக்கு அதிக அளவில் தொழிலாளர்கள் வந்து பணியாற்றுகின்றனர். இந்த சூழலில் இது வடமாநிலத்தவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே மனஸ்தாபத்தை உருவாக்கும் விதத்தில் பரப்பப்படுகிறது. கடத்தல் தொடர்பாக எந்த விதமான தகவலும் இதுவரை போலீசாருக்கு வரவில்லை.

சமூக வலைதளங்களில் யார் பதிவிட்டனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏழு ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் தொடர்பாக எந்த வழக்கும் பதிவாகவில்லை.

கோவை, கண்ணம்பாளையம் மற்றும் வீரப்பாண்டி பகுதியில் குழந்தை கடத்தல் நடைபெற்றதாகவும், அவர்களை பொதுமக்கள் தாக்கியதாகவும் வீடியோ பரவுகிறது. அது வேறு ஏதோ ஒரு பகுதியில், வேறு ஏதோ ஒரு சம்பவத்திற்காக நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர்கள் இரண்டு பேர் பிடிபட்டதாகவும், மேட்டுப்பாளையத்தில், 18 பேர் வந்திருப்பதாகவும் குரல் பதிவுகள் வாட்ஸாப்பில் பரப்பப்பட்டு வருவது முற்றிலும் தவறானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணிடம் கடந்த, 8ம் தேதி ஆட்டோவில் மிக்ஸி வியாபாரம் செய்து வந்த வடமாநில நபர் மிக்ஸி வேண்டுமா என ஹிந்தியில் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் வேண்டாம் எனக் கூறியுள்ளார். அவருக்கு தமிழ் மொழி புரியாமல் அவர் வீட்டு படிக்கட்டில் ஏறியுள்ளார். உடனே அந்த பெண் தனது குழந்தையை கடத்த வருவதாக எண்ணி கட்டையை எடுத்துக்கொண்டு அடிக்க துரத்தி உள்ளார்.

மேலும், அவருடன் அருகில் வசிக்கும் நபர்களும் துரத்தி உள்ளார். உடனே பயந்து போன அந்த நபர் அவர் வந்த ஆட்டோவில் ஏறி அங்கிருந்து சென்று விட்டார். அவருடன் வந்த மற்றொரு வடமாநில நபர் மட்டும் அங்கு அருகிலேயே உட்கார்ந்து இருந்ததை பொதுமக்கள் பார்த்து அவரை பிடித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணையில், 'இரண்டு வடமாநில நபர்களும் மேட்டுப்பாளையத்தில் இருந்து வாடகைக்கு ஆட்டோ எடுத்து வந்ததும், குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக எவ்வித முகாந்திரமும் இல்லாததும் தெரிந்தது.

மிக்ஸி விற்க வந்தவர்கள்...








      Dinamalar
      Follow us