/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'குழந்தைகள் பலுானை விழுங்கினால் 'ஹீம்லிச்' முறையில் காப்பாற்றலாம்'
/
'குழந்தைகள் பலுானை விழுங்கினால் 'ஹீம்லிச்' முறையில் காப்பாற்றலாம்'
'குழந்தைகள் பலுானை விழுங்கினால் 'ஹீம்லிச்' முறையில் காப்பாற்றலாம்'
'குழந்தைகள் பலுானை விழுங்கினால் 'ஹீம்லிச்' முறையில் காப்பாற்றலாம்'
ADDED : நவ 14, 2025 10:11 PM

மேட்டுப்பாளையம்: குழந்தைகள் பலூனை விழுங்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால், 'ஹீம்லிச்' முதலுதவி முறையை பயன்படுத்தி அவர்களை காப்பாற்றலாம்.
இதுகுறித்து, காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலைய, ஹோமியோபதி பிரிவு அரசு உதவி மருத்துவர் ஜெயஸ்ரீ மீனாட்சி கூறியதாவது:- பெரும்பாலும் 5 வயது குழந்தைகள், தங்கள் கையில் எது கிடைத்தாலும் அதை வாயில் போட்டு மென்று பார்க்க முயற்சிப்பார்கள்.
பலுான் அல்லது வேறு ஏதாவது பொருள் குழந்தைகள் வாயில் போட்டு விழுங்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அவர்களை காப்பாற்ற 'ஹீம்லிச்' எனப்படும் முதலுதவி முறையை பயன்படுத்த வேண்டும்.
'ஹீம்லிச்'...எப்படி? நம் இரண்டு கைகளையும், குழந்தையின் பின் பக்கத்தில் இருந்து, வயிற்று பகுதியில் வைத்தவாறு 5 முறை அழுத்த வேண்டும். சின்ன குழந்தையாக இருந்தால், ஒரு கையை குழந்தையின் மார்பு பகுதியில் சாய்த்தவாறு வைத்துவிட்டு, முதுகு பகுதியில் மற்றொரு கையால் தட்டி, தட்டி அடிக்க வேண்டும். குழந்தையின் வாயை திறந்து, நம் கண்களுக்கு அவர்கள் விழுங்கிய பொருள் தென்படுகிறதா என பார்த்து எடுக்க வேண்டும். 'ஆன்ட்டி சோக் கிங் டிவைஸ்' பயன்படுத்தியும், வெளியே எடுக்கலாம். குழந்தைகளுக்கு பெரிய அளவிலான மாத்திரைகளை அப்படியே கொடுக்கக் கூடாது. உடைத்து தான் கொடுக்க வேண்டும். குழந்தைகள் கையில் என்ன உள்ளது என, எப்போதும் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
---

