/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பில்சின்னாம்பாளையத்தில் சிறார் வாசிப்பு மையம்
/
பில்சின்னாம்பாளையத்தில் சிறார் வாசிப்பு மையம்
ADDED : பிப் 11, 2025 11:35 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே பில்சின்னாம்பாளையத்தில், சிறார் வாசிப்பு மையம் துவங்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே பில்சின்னாம்பாளையம் கிராமத்தில், சிறார்களின் புத்தக வாசிப்பை மேம்படுத்தும் வகையில் சிறார் வாசிப்பு மையங்கள் துவங்கப்படுகின்றன.
சிறார் வாசிப்பு அமைப்பு நிறுவனர் அம்சபிரியா தலைமை வகித்து பேசுகையில், ''சிறார் வாசிப்புக்காக வேறு, வேறு இடங்களுக்கு செல்வதில் உள்ள இடர்களை களையும் வகையில் அவர்கள் குடியிருப்பு பகுதியில் நான்கு அல்லது ஐந்து வீதிகளை ஒருங்கிணைத்து சிறார் வாசிப்பு மையங்கள் துவங்க முடிவெடுக்கப்பட்டது.அதன்படி, ஊரின் மேற்கு பகுதியில் துவங்கப்பட்டுள்ளது. வாசிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது,'' என்றார்.
சிறார் வாசிப்பு மையத்தை எழுத்தாளர் செந்தில்குமார் திறந்து வைத்து, சிறார்கள் ஏன் வாசிக்க வேண்டும் என விளக்கமளித்தார். எழுத்தாளரும்,பழங்குடிமக்களின் சமூகப்பணியாளருமான அருண்பாலாஜி செல்வராஜ், விளையாட்டுகள் வழியாக வாசிப்பின் அவசியத்தை பயிற்சியாக வழங்கினார்.
வாசிப்பு மையத்தின் பொறுப்பாளர் ஹரிப்பிரியா, வாசிப்பு மாணவர்களை எவ்வாறு தலைமைப்பண்புக்கு தயார்படுத்துகின்றதென்பதை விளக்கினார். சிறார்களின் கதை சொல்லல், கவியரங்கம், உரை வழங்கல் நடைபெற்றது. காளிங்கராஜ் நன்றி கூறினார்.

