/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை கலெக்டர் ஆபிசுக்கு 9வது முறை குண்டு மிரட்டல்
/
கோவை கலெக்டர் ஆபிசுக்கு 9வது முறை குண்டு மிரட்டல்
கோவை கலெக்டர் ஆபிசுக்கு 9வது முறை குண்டு மிரட்டல்
கோவை கலெக்டர் ஆபிசுக்கு 9வது முறை குண்டு மிரட்டல்
ADDED : நவ 14, 2025 09:33 PM
கோவை: கோவை கலெக்டர் ஆபிசுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கடந்த ஆக., 26ம் தேதி, இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திய போது, புரளி என்பது தெரிய வந்தது. அதன் பிறகு தொடர்ந்து, இரண்டு மாதங்களாக பல்வேறு நாட்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது. புகார் அளிக்கப்பட்டும் மிரட்டல் விடுப்பவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒன்பதாவது முறையாக நேற்று, கோவை கலெக்டர் ஆபிசுக்கு இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் புரளி என்பது தெரிய வந்தது.
சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'மர்ம நபர்கள் தொடர்ச்சியாக 'டார்க் நெட்' வாயிலாக மிரட்டல் விடுப்பதால், ஐ.டி.,யை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து இ-மெயில் முகவரியை ஆய்வு செய்ததில், மும்பையில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்' என்றனர்.

