/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடைபாதையில் இருக்கு ஆபத்து; பரிதாப நிலையில் பாதசாரிகள்
/
நடைபாதையில் இருக்கு ஆபத்து; பரிதாப நிலையில் பாதசாரிகள்
நடைபாதையில் இருக்கு ஆபத்து; பரிதாப நிலையில் பாதசாரிகள்
நடைபாதையில் இருக்கு ஆபத்து; பரிதாப நிலையில் பாதசாரிகள்
ADDED : டிச 02, 2025 07:32 AM

கோவை: கோவை நகர் பகுதியில் பாதசாரிகள் ரோட்டை கடப்பதற்கோ, ரோட்டோரத்தில் நடந்து செல்வதற்கோ போதுமான கட்டமைப்பை ஏற்படுத்தி தருவதில்லை. மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள் கண்டுகொள்வதில்லை.
ரயில்வே ஸ்டேஷன் ரோடு, அரசு கலை கல்லுாரி ரோடு, டவுன்ஹால், காந்திபுரம், ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில், நடைபாதைகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. அவற்றை அகற்றி பாதசாரிகளுக்கான பாதையை உருவாக்கிக் கொடுக்க, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அக்கறை செலுத்தாமல் இருக்கின்றனர்.
பல இடங்களில் கால்வாய் அடைப்பு நீக்க, மாநகராட்சி ஊழியர்களால் உடைக்கப்பட்ட நடைபாதைகளும், சீரமைக்கப்படாமல் இருக்கின்றன. பாதசாரிகள் குழிக்குள் விழுகின்றனர்.
ரயில்வே ஸ்டேஷன் முன்புள்ள நடைபாதையில் சிலாப் கற்கள் உடைந்து பள்ளம் இருக்கிறது. மழை பெய்யும்போது பள்ளம் இருப்பது தெரிவதில்லை. மழை நீர் வடிந்தோடிச் செல்கிறதென நினைத்து, ரயில் பயணிகள் லக்கேஜ்களுடன் நடந்து செல்லும்போது, குழிக்குள் சிக்கி, அவதிப்படுகின்றனர்.
செல்வபுரம் பைபாஸில் கால்வாய் மீது போட்டுள்ள நடைபாதையும் பெயர்ந்து, கான்கிரீட் கம்பிகள் மட்டும் தெரிகின்றன. அவ்வழியாக செல்வோர் பாதிக்காமல் இருக்க, அதன் மீது முள் போடப்பட்டுள்ளது.
பாதசாரிகளின் நலன் கருதி, நடைபாதையில் உள்ள பள்ளங்களை மூடுவதற்கும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

