/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் - பட்டம்' வினாடி - வினா போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் வேற லெவல்
/
'தினமலர் - பட்டம்' வினாடி - வினா போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் வேற லெவல்
'தினமலர் - பட்டம்' வினாடி - வினா போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் வேற லெவல்
'தினமலர் - பட்டம்' வினாடி - வினா போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் வேற லெவல்
ADDED : நவ 14, 2025 09:35 PM

கோவை: கோவை டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கணேசபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற, தினமலர் பட்டம் 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி வினா நிகழ்ச்சியில், மாணவ - மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம், இந்துஸ்தான் கல்விக் குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து, மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவியரின் பாடப்பகுதிகள் சார்ந்த உள்ளார்ந்த சிந்தனை திறன் மற்றும் பொது அறிவு திறன்களை மேம்படுத்தவும், படிப்பின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கவும், இது போன்ற வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன்படி, டாடாபாத், கணேசபுரம், வடகோவை ஆகிய பகுதிகளில் செயல்படும், மாநகராட்சி நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி:: இப்பள்ளியில் நடைபெற்ற முதற் சுற்று எழுத்து தேர்வில்: 'ஏ' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் தீபக் குமரன் மற்றும் ஏழாம் வகுப்பு மாணவன் ஹரி பிரசாத் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
இவர்களுடன், 'இ' அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி தேக் ஷஸ்ரீ மற்றும் ஏழாம் வகுப்பு மாணவி அனுஸ்ரியா; 'பி' அணியை சேர்ந்த எட்டம் வகுப்பு மாணவி திவ்ய பாலா மற்றும் ஆறாம் வகுப்பு மாணவி வாஷ்னா பஹிமா; 'டி' அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி போதிகா மற்றும் ஏழாம் வகுப்பு மாணவி சனரேபெகா; 'ஜி' அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி தன்யா மற்றும் ஏழாம் வகுப்பு மாணவி சாய்சனா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். தலைமையாசிரியர் தில்லை கோவிந்தன் பரிசுகள் வழங்கினார்.
கணேசபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி:: இப்பள்ளியில் நடைபெற்ற: 'ஜி' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவிகள் மித்ராதேவி மற்றும் சவுபர்னிகா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
இவர்களுடன், 'ஏ' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் யாகேஷ் மற்றும் சுபாஷினி; 'டி' அணியை சேர்ந்த எட்டம் வகுப்பு மாணவர்கள் கமலிகா மற்றும் யகர்ஷ்; 'எப்' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி தனலட்சுமி மற்றும் ஏழாம் வகுப்பு மாணவன் ஸ்ரீனிஷ்; 'சி' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஜனனி மற்றும் ஏழாம் வகுப்பு மாணவன் சாய்சஞ்சய் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். தலைமையாசிரியர் நாகராஜ் பரிசுகள் வழங்கினார்.
வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி:: இப்பள்ளியில் நடைபெற்ற: 'ஏ' அணியை சேர்ந்த ஆயிஷா சித்திகா மற்றும் தீபிகா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
இவர்களுடன், அரையிறுதிக்கு 'டி' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஹரிஹரன் மற்றும் பிரனீத்; 'இ' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மற்றும் எட்டாம் வகுப்பு மாணவி நந்தினி; 'எப்' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி மைக் ஜோஷிவ்னா ஏழாம் வகுப்பு மாணவன் ஸ்ரீராம்; 'பி' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் அபிரூபா மற்றும் தன்யாஸ்ரீ ஆகியோர் தகுதி பெற்றனர். தலைமையாசிரியை லதா ஜூலியட் பரிசுகள் வழங்கினார்.
'இப்போட்டியின் மூலம் நாட்டு நடப்புகள், நவீன தொழில்நுட்பம், அரிய செய்திகள் போன்றவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது' என, பங்கேற்ற மாணவ மாணவியர் தெரிவித்தனர்.

