தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குப்பையை தரம் பிரித்து கொடுக்க மறக்காதீங்க!

குப்பையை தரம் பிரித்து கொடுக்க மறக்காதீங்க!

குப்பையை தரம் பிரித்து கொடுக்க மறக்காதீங்க!


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து, வால்பாறை மக்களிடையே நகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பையை நான்கு வகையாக தரம்பிரித்து வழங்க வேண்டும் என்று நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் குப்பை தரம்பிரித்து வழங்குவது குறித்து, நகராட்சி கமிஷனர் வெங்கடலட்சுமணன், துப்புரவு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.

நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை, மக்கும், மக்காத குப்பை, சுகாதாரக்கழிவுகள், சிறப்பு வகை கழிவுகள் என நான்கு வகையாக பிரித்து, துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்த்து, பிளாஸ்டிக்குக்கு மாற்றாக துணிப்பை பயன்படுத்த வேண்டும், என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us