தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சம்பளம் வரவில்லை ஊழியர்கள் கவலை

 சம்பளம் வரவில்லை ஊழியர்கள் கவலை

 சம்பளம் வரவில்லை ஊழியர்கள் கவலை


ADDED : ஜூலை 06, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 06:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: மாநிலம் முழுவதும் உதவி திட்ட அலுவலர்கள், உதவி அலுவலர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், சமுதாய அமைப்பாளர்கள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

பணியின் தன்மைக்கு ஏற்ப மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஊதியம் பெறுகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், திட்டப் பணிகளில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் முதல் கட்ட திட்டம் நிறைவடைந்து, தற்போது 2.0 திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதுவரை பழைய திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்தே ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. புதிய திட்டத்துக்கான நிதி இன்னும் விடுவிக்கப்படாததால், ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us