/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக சர்க்கரை நோய் தினத்தில் கண் விழித்திரை பரிசோதனை
/
உலக சர்க்கரை நோய் தினத்தில் கண் விழித்திரை பரிசோதனை
உலக சர்க்கரை நோய் தினத்தில் கண் விழித்திரை பரிசோதனை
உலக சர்க்கரை நோய் தினத்தில் கண் விழித்திரை பரிசோதனை
ADDED : நவ 14, 2025 09:29 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, சர்க்கரை மற்றும் கண் விழித்திரை பரிசோதனை முகாம் நடந்தது.
லயன்ஸ் கிளப் ஆப் பொள்ளாச்சி, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, டாக்டர் ராஜேந்திரன் டயாபடிஸ் சென்டர் சார்பில், இலவச சர்க்கரை பரிசோதனை முகாம், சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடைபெற்றன.
பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் நடந்த முகாமினை, எம்.எல்.ஏ. ஜெயராமன், சூளேஸ்வரன்பட்டியில் நடந்த முகாமினை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். லயன்ஸ் கிளப் செயலாளர் விஜயகுமார் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். சங்க நிர்வாகி கனகவல்லி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முகாமில், சர்க்கரை நோயினால், கண் விழித்திரை பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சர்க்கரை நோயினால் பார்வை பறிபோனால் திரும்ப கிடைப்பது கடினமாகும். தொடர் கண் பரிசோதனை செய்வதன் வாயிலாக கண் பார்வையை பாதுகாக்கலாம்,' என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சர்க்கரை மற்றும் கண் விழித்திரை பரிசோதனை செய்யப்பட்டது. விழித்திரை பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசர் சிகிச்சையும், விழித்திரை பாதிப்பு அதிகம் உள்ளோர்க்கு, கண் நரம்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

