/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைந்த விலைக்கு இளநீர் விற்காதீர்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
/
குறைந்த விலைக்கு இளநீர் விற்காதீர்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
குறைந்த விலைக்கு இளநீர் விற்காதீர்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
குறைந்த விலைக்கு இளநீர் விற்காதீர்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : நவ 02, 2025 08:41 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலையை ஒப்பிடுகையில், ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், ஒரு ரூபாய் குறைக்கப்பட்டு, 30 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 13,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளநீர் விற்பனையாகும் அனைத்து பகுதிகளிலும் மழை இல்லாத காரணத்தால் இளநீர் அறுவடை சுறுசுறுப்பாக நடைபெறுகிறது.
இருப்பினும் வியாபாரிகள், இளநீர் விலையை குறைத்து வாங்கவே முற்படுகின்றனர். தேங்காய் விலை உச்சத்தில் இருக்கும் போது இளநீர் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு, குறைந்த விலைக்கு இளநீரை விற்பதே காரணமாகும்.
தேங்காய் விலையை கணக்கிட்டு இளநீரை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டாம். மாறாக, இளநீர் அறுவடையை ஓரிரு மாதங்கள் நிறுத்தி வைக்கலாம். விலை உயரும்போது, இளநீரை அறுவடை துவக்கலாம். இதன் வாயிலாக, இளநீர் விலை வீழ்ச்சியை தடுக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

