/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகை கடையில் தீ : போலீஸ் விசாரணை
/
நகை கடையில் தீ : போலீஸ் விசாரணை
ADDED : நவ 14, 2025 09:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பெரிய கடைவீதி, வைஷ்யாள் பத்ரி நாராயணன் என்பவர் நகை கடை மற்றும் நகை பாலிஷ் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, கடையை ஊழியர்கள் பூட்டி சென்றனர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, நகை பட்டறையில் திடீரென்று தீ ஏற்பட்டது.
ரோந்து போலீசார் கவனித்து, கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். கடைக்குள் நகை பாலிஷ் செய்வதற்காக பயன்படுத்தப்படும், காஸ் சிலிண்டர் இருந்தது. அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். பெரிய கடை வீதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தீ எப்படி ஏற்பட்டது என, போலீசார் விசாரிக்கின்றனர்.

