/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.ஐ.டி., கல்லுாரியில் ஐவர் பூப்பந்து போட்டி
/
சி.ஐ.டி., கல்லுாரியில் ஐவர் பூப்பந்து போட்டி
ADDED : மார் 18, 2024 12:43 AM
கோவை;சி.ஐ.டி.,கல்லுாரியில் நடந்த ஐவர் பூப்பந்து போட்டியில். வீரர்கள் அசத்தலாக விளையாடினர்.
சி.ஐ.டி., கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில். 'மகேந்திரா பம்ப்ஸ் கோப்பைக்கான' மாவட்ட அளவிலான ஐவர் பூப்பந்து போட்டி, சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டியை, சி.ஐ.டி., கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார். இதில், 17 அணிகள் நாக் அவுட் முறையில் போட்டியிட்டன.
நேற்று நடந்த முதல் காலிறுதிப்போட்டியில், என்.ஆர்.பி.சி., அணி 2 - 0 என்ற செட்கணக்கில் ரெட்ஸ்டார் அணியையும், ஜி.டி.டபிள்யூ.ஆர்.சி., 2 - 0 என்ற செட் கணக்கில் ஜி.டி., 'ஏ' அணியையும், குப்பு 5ஸ் அணி 2 - 0 என்ற செட் கணக்கில், ஏ.எம்.பி.சி., அணியையும் வீழ்த்தின.

