/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஜி.சி.டி., கல்லுாரி விடுதியில் ஆய்வு
/
உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஜி.சி.டி., கல்லுாரி விடுதியில் ஆய்வு
உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஜி.சி.டி., கல்லுாரி விடுதியில் ஆய்வு
உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஜி.சி.டி., கல்லுாரி விடுதியில் ஆய்வு
ADDED : நவ 14, 2025 10:53 PM

கோவை: மாணவர்கள் புகாரை தொடர்ந்து கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி விடுதியில், உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
தடாகம் ரோட்டில், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. கல்லுாரியில் மாணவர்களுக்கு போதுமான கழிப்பறை வசதிகள் இல்லை எனவும், விடுதி உணவில் சுகாதாரம் இல்லை எனவும், மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் மாணவர்கள் புகார் உறுதியானது. தனியார் ஒருவருக்கு கல்லுாரி விடுதி உணவகத்தை நடத்த ஒப்பந்தம் வழங்கப்பட்டு, அவர்கள் சமையலறையை முறையாக பராமரிக்காதது உறுதியானது.
மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''உணவுப்பாதுகாப்பு துறை சான்றிதழ் வைத்துள்ளனர். ஆனால், விடுதி சமையறையில் ஆய்வு செய்த போது அது சுகாதாரமற்ற முறையில் பராமரிப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. முறையான கழிவு பொருட்கள் பராமரிப்பு இல்லை. உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் முறையாக பாதுகாக்கப்படவில்லை. கல்லுாரி முதல்வர் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு, 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
'' குறிப்பிட்ட கால இடைவெளியில் விடுதி, சமையறை ஆகியவற்றை பராமரித்து அதற்கான சான்றிதழ்களை பெற உத்தரவிடப்பட்டுள் ளது. விடுதி, சமையலறை தொடர்ந்து கண்காணிக்கப்படும்,'' என்றார்.

