/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புற்றுநோயை தடுக்க இதோ சில வழிகள்
/
புற்றுநோயை தடுக்க இதோ சில வழிகள்
ADDED : பிப் 04, 2025 12:52 AM
உலகளவில் கிட்டத்தட்ட 30 சதவீதம் புற்றுநோய் ஏற்படுவதற்கு, புகையிலை பயன்பாடு காரணமாக அமைகிறது. புற்றுநோய் பயன்படுத்துவதால் நுரையீரல், வாய், கணையம் மற்றும் சிறுநீரக புற்றுநோய் ஏற்படலாம். சிகரெட், ஈ சிகரெட், சிகார்ஸ் மற்றும் புகையிலை மெல்லுவது போன்ற எந்த ஒரு வடிவிலும், புகையிலை பயன்படுத்தாமல் இருப்பதன் மூலமாக, புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
அதிக உடல் எடை, ஈஸ்ட்ரோஜன் மற்றும் இன்சுலின் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, அதனால் புற்றுநோய் வளர்ச்சியை ஏற்படுத்துவதாக, ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே வழக்கமான முறையில் உடற்பயிற்சி செய்து, சரிவிகித உணவை உண்டு, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும். பழங்கள், காய்கறி, முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இருப்பதால், அவை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கின்றன. அதிக கலோரி கொண்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது யோகா போன்ற மிதமான உடல் செயல்பாடுகளில் குறைந்தது, 30 நிமிடங்கள் ஈடுபடுவது, பல்வேறு புற்றுநோய்களின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள்.

