/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாம்பு கடித்தால் காலில் இறுக கட்டக்கூடாது: அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறிவுறுத்தல்
/
பாம்பு கடித்தால் காலில் இறுக கட்டக்கூடாது: அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறிவுறுத்தல்
பாம்பு கடித்தால் காலில் இறுக கட்டக்கூடாது: அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறிவுறுத்தல்
பாம்பு கடித்தால் காலில் இறுக கட்டக்கூடாது: அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறிவுறுத்தல்
ADDED : நவ 17, 2025 01:42 AM
கோவை: பாம்புக்கடி உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு, இறுக்கமாக கட்டு போட்டு வருவதால், ரத்த ஓட்டம் தடைபட்டு விரல்கள் அழுகும் அபாயம் உள்ளதால், அவ்வாறு செய்யக்கூடாது என, பொதுமக்களுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனைக்கு மாதந்தோறும், 4-5 குழந்தைகள் விஷம் சார்ந்த பிரச்னைகளுக்காக அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த மாதம், 3 குழந்தைகள் பாம்புக்கடியில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
பாம்புக்கடியால் அட்மிட் செய்யும் போது, கடிப்பட்ட இடத்தில் கிழித்துவிடுவதும், இறுக்கமாக கட்டு போடுவதும் மக்கள் மத்தியில் வழக்கமாக உள்ளது.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:
விஷக்கடி ஏற்பட்டால், காலை அசைக்காமல் அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். காலில் இறுக்கமாக கட்டு போட்டு வருவதால், ரத்த ஓட்டம் தடைபட்டு விரல் அழுகும் நிலை ஏற்படுகிறது.
பொதுவாக, பாம்புக்கடி, தேள், எலி மருந்து, பூச்சிக்கொல்லி மருந்து, அரளி விதை, மண்ணெண்ணெய் போன்ற விஷங்களால் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சிறுநீரகம், நரம்பு மண்டலம் பாதித்தும், ரத்தம் உறையாமல் சீரியஸ் ஆன நிலையில், குழந்தைகள் அட்மிட் செய்யப்படுகின்றனர். தற்சமயம், 'பிளெக்ஸ் தெரப்பி' என்ற சிகிச்சை செய்வதால், பெரும்பாலும் குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
'கட்டுவிரியன் கடித்தும்
அறிகுறி தெரியவில்லை'
''சமீபத்தில், கட்டுவிரியன் பாம்பு கடி அறிகுறியுடன், குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டது. பெற்றோருக்கு பாம்பு கடி என்பதே தெரியவில்லை. கடி சார்ந்த அறிகுறியும் இல்லை. ஆனால், மூச்சுவிடுவதில் சிரமம், கண் சுருங்குதல், வயிறு வலி போன்ற அறிகுறிகளை கண்டறிந்து பாம்பு விஷமுறிவு மருந்து கொடுத்து காப்பாற்றினோம். இதுபோன்ற விஷயங்களில் பெற்றோர் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,'' என்றார் டாக்டர் செந்தில்குமார்.

