தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'அட்மா' திட்டத்தில் நெல் சாகுபடி ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி 

 'அட்மா' திட்டத்தில் நெல் சாகுபடி ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி 

 'அட்மா' திட்டத்தில் நெல் சாகுபடி ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி 


ADDED : ஜூலை 02, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனைமலை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 'அட்மா' திட்டத்தின் கீழ், நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

வாணவராயர் வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் முனைவர் நந்தகுமார், நெல் சாகுபடியில் யூரியா, ரசாயன உரம் குறைந்த அளவில் பயன்படுத்தவும், விதைத்த ஒரு வாரத்துக்குள் களைக்கொல்லியை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் பேசியதாவது:

இயந்திர நடவு அல்லது நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானிய ஊக்கத்தொகை, 4,000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்கு உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும்.

கடைசி உழவில் அடி உரமாக நன்கு மக்கிய குப்பை கலந்த இயற்கை உரத்தை, ஏக்கருக்கு, ஐந்து டன் அல்லது பசுந்தாள் பயிர் விதைத்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.

விதைத்து, 30 நாட்களுக்கு பிறகு நீர் மறைய, நீர் பாய்ச்ச்சும் நடைமுறை கடைப்பிடிக்க வேண்டும். பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம் போன்ற அங்கக வேளாண் இடு பொருட்களை பண்ணையிலேயே தயார் செய்து வாரம் ஒரு முறை இலை வழி அல்லது வயலில் பாசனத்தின் போது நீரில் கலந்து பயன்படுத்தலாம்.

நெல் நுண்ணுாட்ட கலவை ஏக்கருக்கு, ஐந்து கிலோ இடுவது நெல்மணிகள் எடை அதிகரிக்க கைகொடுக்கும். ஏக்கருக்கு, 10 கிலோ துத்தநாக சல்பேட் இடுவதால் துத்தநாக பற்றாக்குறையால் ஏற்படும் வளர்ச்சி குன்றிய நிலை தவிர்க்கப்படும்.

அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா பயன்படுத்தினால், நெல் பயிரிடும் நிலங்களில் வளமான மண் உருவாக்கத்துக்கு உறுதுணையாகும். குறைந்த வயதுடைய நெல் ரகங்களான கோ 55, கோ 51, ஏஎஸ்டி 16, ஏடிடி 37 ஆகியவற்றை பயிரிட விவசாயிகள் ஆர்வமுடன் உள்ளனர்.

இவ்வாறு, அவர் பேசினார்.

துணை வேளாண் அலுவலர் சிவக்குமார், உதவி விதை அலுவலர் மாடசாமி, உதவி வேளாண் அலுவலர்கள் இளங்கோவன், அம்சத், 'அட்மா' திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் அர்ஜூன்குமார் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us