/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச கராத்தே, சிலம்பம் சி.எம்.எஸ்., மாணவருக்கு பதக்கம்
/
சர்வதேச கராத்தே, சிலம்பம் சி.எம்.எஸ்., மாணவருக்கு பதக்கம்
சர்வதேச கராத்தே, சிலம்பம் சி.எம்.எஸ்., மாணவருக்கு பதக்கம்
சர்வதேச கராத்தே, சிலம்பம் சி.எம்.எஸ்., மாணவருக்கு பதக்கம்
ADDED : மார் 15, 2024 12:17 AM

கோவை;மலேசியாவில் நடந்த சர்வதேச அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டியில் கோவை சி.எம்.எஸ்., கல்லுாரி மாணவர் இரண்டு பதக்கங்கள் வென்றார்.
உலக சிலம்பம் விளையாட்டு அசோசியேஷன், மலேசியா எம்.ஜி.ஆர்., சிலம்பம் அசோசியேஷன் சார்பில் சர்வதேச கராத்தே மற்றும் சிலம்பம் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான போட்டிகள் மலேசியாவில் நடந்தது.
இப்போட்டியில், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 1400க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனையினர் பங்கேற்றனர். இதில் சி.எம்.எஸ்., இன்ஜி., கல்லுாரியின் (பி.டெக் முதலாமாண்டு) மாணவர் ராகுல் ஒற்றை கொம்பு சிலம்பம் மற்றும் கராத்தேவில் கட்டா ஆகிய பிரிவுகளில் பங்கேற்றார்.
கொடுக்கப்பட்ட நேரத்தில் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய ராகுல், சிலம்பத்தில் முதலிடத்தையும், கராத்தேவில் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவரை சி.எம்.எஸ், அறக்கட்டளை தலைவர் ராஜகோபாலன், துணைத்தலைவர் அசோக், கல்லுாரி முதல்வர் சுதா, பயிற்சியாளர்கள் தாமரைக்கணி, சரவணபாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

