/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேலோ இந்தியா பீச் வாலிபால்; கற்பகம் பல்கலை அணி தகுதி
/
கேலோ இந்தியா பீச் வாலிபால்; கற்பகம் பல்கலை அணி தகுதி
கேலோ இந்தியா பீச் வாலிபால்; கற்பகம் பல்கலை அணி தகுதி
கேலோ இந்தியா பீச் வாலிபால்; கற்பகம் பல்கலை அணி தகுதி
ADDED : டிச 02, 2025 07:36 AM
கோவை: ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் பல்கலைகளுக்கு இடையே, கேலோ இந்தியா பீச் வாலிபால் போட்டி நடந்து வருகிறது. அகில இந்திய அளவிலான இப்போட்டிக்கு, எட்டு சிறந்த பல்கலை அணியின் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கற்பகம் பல்கலையை சேர்ந்த இரண்டாம் ஆண்டு எம்.காம்., மாணவர்கள் அபிஷேக், சுகுமார் ஆகியோர் ஆண்களுக்கான பீச் வாலிபால் போட்டிக்கு, தேர்வு செய்யப்பட்டனர். மாணவியர் பிரிவில் பி.காம்., முதலாம் ஆண்டு மாணவிகள் ஜீவிதா, அபிநயா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
'லீக்' சுற்றில் ஆண்கள் அணி, கேரள பல்கலை அணியை வென்று முதலிடத்தை பெற்றது. பெண்கள் அணி, குஜராத் பேர்ல் யுனிவர்சிட்டி மகளிர் அணியை வென்று, அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை பல்கலை நிர்வாகம் பாராட்டியது.