/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
/
கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : டிச 02, 2025 06:40 AM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த சில மாதங்களாக கோவிலை சுற்றி கற்களை பதித்தல், தங்க கொடிமரம், அரங்க மண்டபத்துக்கு டைல்ஸ் பதித்தல், கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு பணிகள் நடந்தன. இவை நிறைவு பெற்றதை ஒட்டி கோயிலின் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள், சாந்தி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து முதல் கால வேள்வி, மங்கல இசை, குருதட்சணை கொடுத்தல், புனித நீர் தெளித்தல், கங்கன நூல் கட்டுதல், ஆராதனை, புற்றுமண் எடுத்தல், யாகசாலை பிரவேசம், வேத பிரபந்த பாராயணம், இதிகாச புராணங்கள் பாராயணம் செய்தல் மற்றும் ஆரத்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா காலை, 5.00 மணிக்கு ஆறாம் கால வேள்வியோடு தொடங்கியது. காலை, 8.00 மணிக்கு மூலவர் கோபுரம், ராஜகோபுரம், ஆண்டாள் திருக்கோவில் கோபுரம் ஆகியவற்றுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அன்னதானம், பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

