/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆண்களுக்கான குடும்பநலம் விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
/
ஆண்களுக்கான குடும்பநலம் விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
ஆண்களுக்கான குடும்பநலம் விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
ஆண்களுக்கான குடும்பநலம் விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
ADDED : டிச 07, 2025 07:35 AM
கோவை: மாவட்ட சுகாதார அலுவலகத்தில், குடும்ப நலத்துறை சார்பில், ஆண்களுக்கான இலவசகுடும்பநலஅறுவைசிகிச்சை விழிப்புணர்வு வாகனத்தை, கலெக்டர் பவன்குமார் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
குடும்ப நல செயலகம் சார்பில், ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை நவீன வாசக்டமி இருவார விழா முன்னிட்டு மாவட்டம் முழுவதும், பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
தொடர்ந்து, ஆண்களுக்கான குடும்பநல அறுவைசிகிச்சை முகாம்கள் நடைபெறவுள்ளன. அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஆண்களுக்கு, அரசு, தனியார் மற்றும் கலெக்டர் என்ற மூன்று பங்களிப்பில் 3,100 ரூபாய் நிதியாக வழங்கப்படுகிறது.
விழிப்புணர்வு வாகன துவக்கவிழாவில், குடும்பநலத்துறை துணை இயக்குனர் கவுரி, கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் கீதாஞ்சலி, மாவட்ட சுகாதார அலுவலர் பாலுச்சாமி, இணை இயக்குனர் சுமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

