/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை அரசு மருத்துவமனையில் தயார்: டீன்
/
பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை அரசு மருத்துவமனையில் தயார்: டீன்
பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை அரசு மருத்துவமனையில் தயார்: டீன்
பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை அரசு மருத்துவமனையில் தயார்: டீன்
ADDED : டிச 07, 2025 07:45 AM
கோவை: பருவமழை முன்னெச்சரிக்கையாக, மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின் படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில், பருவமழை காரணமாக காய்ச்சல், ஏதேனும் விபத்துக்கள் எதிர்கொள்ளும் வகையில், 20 படுக்கை அறையுடன் கூடிய வார்டு தயார்நிலை யில் அனைத்து அத்தியாவசிய வசதிகளுடன் வைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் தண்ணீர் தேங்கும் இடங்கள், மின்சாதனங்கள், போன்றவற்றை உடனடியாக பராமரித்து கண்காணிக்க, அந்தந்த பொறுப்பாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீன் கீதாஞ்சலி கூறுகையில், '' காய்ச்சல் பாதிப்புகள் ஏதும் இல்லை. மாவட்ட கலெக்டர் பருவமழை சூழல்களை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ரேபீஸ் பாதிப்புக்கு போதுமான தடுப்பூசி, பாம்பு கடிக்கான விஷமுறிவு மருந்து போன்றவை இருப்பில் வைக்கவும், மழைநீர் தேங்கும் இடங்களை சரிசெய்யவும், அந்தந்த பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.